"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை" - பிரேம்ஜி.! கங்கை அமரன் கண்ணீர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சிம்பு இயக்கிய வல்லவன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் பிரேம்ஜி. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனரும் இவரது சகோதரருமான வெங்கட் பிரபுவின் சென்னை 28, மங்காத்தா, பிரியாணி,  ரோஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் சகோதரரும்  மூத்த இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியரான கங்கை அமரனின் இளைய மகனாவார் பிரேம்ஜி.

நீண்ட காலமாகவே திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றி வருகிறார் இவர். 43 வயதான பிரேம்ஜி இனியும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கிறார் அவரது தந்தை கங்கை அமரன்.

இது பற்றி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர். கடவுள் என்னை எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக பார்த்துக்  கொள்கிறார் அன்பான மகன்கள் அழகான குடும்பம் என்று நிம்மதியாக இருந்தேன். கடந்த வருடம் என் மனைவி இறந்தது முதல் மிகவும் கவலையாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

தனது மனைவியின் ஆசையும் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான். அவனிடம் திருமணத்தைப் பற்றி பேசினாலே என்னால் மனைவிக்கு புடவை வாங்கி கொடுத்து  குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் இப்படியே இருந்து விடுகிறேன் என கூறுகிறான். என் வீட்டில் தற்போது நானும் அவனும் மட்டும் தான் இருக்கிறோம். என் மகன் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறான் என தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

premji said no to marriage his daddy gangai amaran sad interview


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->