பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் படம் வரலாற்றை திருத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றை திரித்து இயக்குனர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளதாக, மணிரத்தினத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அவரின் அந்த மனுவில், கல்கியின் நாவலை தழுவிய இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவனின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், வரலாற்றை திரித்து மணிரத்தினம் படத்தை உருவாக்கியதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதில், கல்கியின் நாவலை தழுவிய திரைப்படத்தில் வந்தியதேவனின் பெயரை இயக்குநர் தவறாக பயன்படுத்தி உள்ளார் என்று மனுதாரர் தெரிவிக்கிறார்.

ஆனால் கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர், வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தின் முன்னோட்ட கட்சி அண்மையில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PonniyinSelvan1 PS1 ManiRatnam ChennaiHC


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->