ஷாருக்கானின் பதான் பட டீசர் குறித்த சூப்பர் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஜான் ஆபிரகாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டது. 

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர்  குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. 

அதில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பதான் படத்தின் டீசர் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pathan movie teaser date 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->