சர்ச்சையில் ஓவியா! முதலில் உன்னை கைது செய்யணும்...! ஓவியாவுக்கு எதிராக ரசிகர்கள் கடும் தாக்கு - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 41 பேரின் உயிரை பலிகொண்டது. இந்த சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த நடிகை ஓவியா, “விஜய்யை கைது செய்ய வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

அவரது பதிவே நிமிடங்களிலேயே வைரலாகி, ஆதரவு-எதிர்ப்பு என இருவிதமான கருத்துகளும் சரமாரியாக எழுந்தன. இதில் கடும் விமர்சனங்கள் அதிகரித்ததால், ஓவியா தனது பதிவை நீக்கிவிட்டாலும், அவர்மீது குற்றச்சாட்டுகள் அலைமோதிக் கொண்டே உள்ளன.

மேலும், தனக்கு எதிராக வெளியான சில விமர்சனங்களை ஸ்கிரீன்‌ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார் ஓவியா.அதில், “நீ குடித்துவிட்டு கார் ஓட்டி பலரை கொன்ற சம்பவத்தை மறந்துவிட்டாயா? கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்தபோது நீ எங்கே இருந்தாய்? உன்னை முதலில் கைது செய்ய வேண்டியதுதான்” என்ற கடும் கருத்துகள் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வெடித்துக் கொண்டிருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oviya controversy should arrest you first Fans attack Oviya


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->