பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
old actress sitalakshmi is death
தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயாரும், பழம்பெரும் நடிகையான சீதாலட்சுமி. நேற்று மாலை 6 மணியளவில் காலமானார். இவருக்கு தற்போது வயது 87 ஆகிறது. கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார்.
திரையுலக ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நாடுகளுடன் உடன் நடித்த பழம்பெரும் நடிகை சீதா லட்சுமி. எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மெல் ஆன்மை, அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்த கண்ணீர், ரஜினிகாந்துடன் அன்புக்கு நான் அடிமை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது திரையுலக சாதனைகளுக்காக கலைமாமணி, கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அகியேரிடம் பெற்றவர். இவரது உடல் தற்போது சென்னை நெற்குன்றத்தில் மேட்டுக்குப்பம் எம் ஆர் பள்ளி அருகில் உள்ள மகள் நடன இயக்குனர் ராதிகாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்துள்ளனர். இவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
old actress sitalakshmi is death