திரை நட்சத்திரம் மட்டுமல்ல… மனிதநேய ஹீரோயின்: சிறுமியின் உயிரை காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன்! - வைரல் வீடியோ
Not just film star humanitarian heroine Shruti Haasan saves young girl life Viral video
மனிதநேயத்தின் அழகை வெளிப்படுத்தும் வகையில், அரிய மரபணு நோயால் உயிர்ப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் உயிர் காக்கும் உதவியை வழங்கியுள்ளார்.
ஆழ்வி என்ற அந்தச் சிறுமி, MSMD எனப்படும் மிகவும் அபூர்வமான மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த உடனடி எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், சிகிச்சைக்கான செலவு குடும்பத்திற்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது.இந்த நெருக்கடியை அறிந்த ஸ்ருதி ஹாசன், எந்த தயக்கமும் இன்றி சிகிச்சைக்கான முழு நிதி உதவியையும் வழங்கி, சிறுமிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அதன் பலனாக, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, சிறுமி தற்போது முழுமையாக குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளார்.நன்றியை வெளிப்படுத்தும் வகையில், சிறுமியும் அவரது பெற்றோரும் ஸ்ருதி ஹாசனை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இந்த உணர்ச்சிமிக்க தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“எங்கள் குழந்தைக்கு புதிய வாழ்க்கை அளித்தவர் ஸ்ருதி ஹாசன் தான். அவர் செய்த உதவியை எங்களால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது,” என்று பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Not just film star humanitarian heroine Shruti Haasan saves young girl life Viral video