தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஒரு நியாயம்!! ஐபிஎல்-க்கு ஒரு நியாயமா?? சோகத்தில் வீரத்தமிழர்கள்!! - Seithipunal
Seithipunalபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்து உள்ள தான்றீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்கார மூர்த்தி கோவில் திரு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி அதிவிமர்சியாக நடைபெற்றது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அதிகப்படியான வடிவாசல்களை வைத்துள்ள மாவட்டமாகும். சமீபத்தில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று தான்றீஸ்வரத்தில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 150 க்கும் மேற்பட்ட காளையர்கள் காளையை தழுவினர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு விழா மிகவும் சோர்வாகவே காணப்பட்டது.

இதுகுறித்து காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டிற்கு தேர்தல் நேரம் என்பதால் பரிசு வழங்க தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பரிசு என்பது வீரர்களுக்கும் காளைகளுக்கும் கொடுக்கப்படும் பரிசின் மதிப்பு விலை குறைவாக இருந்தாலும் வீரத்திற்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் தான் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் பல கோடி கணக்கில் செலவுக்கு செய்து. பல பரிசுகளை வழங்கும் ஐபிஎல் போட்டி தினமும் பிரமாண்டமாக தான் நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் போட்டி தமிழ்நாட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

no price in jallikattu


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal