மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா.? என்ற ரசிகர்களுக்கு, நஸ்ரியா கொடுத்த ஆச்சர்யம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நஸ்ரியா நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர். இதனை தொடர்ந்து ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களால் மிகவும் அவர் பாராட்டப்பட்டார். 

பின்னர் திருமணம் என்னும் நிக்கா, நையாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மிகவும் அதிகம். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பின்னர் அவர் சினிமாவில் நடிக்க வரமாட்டார் என்ற செய்தியானது வெளி வந்தது. ஆனால், இதுகுறித்து நஸ்ரியா எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை.

NAZRIYA SEITHIPUNALக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் ரசிகர்கள், "நீங்கள் இனிமேல் நடிக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, "நான் நடிப்பதை நிறுத்தவே இல்லை. அப்படி நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு கிடையாது. நல்ல கதாபாத்திரங்கள் வரும்பொழுது நிச்சயமாக நடிப்பேன்." என்று தெரிவித்துள்ளார். 

தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NAZRIYA REPLIED TO HER FANS


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்




கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்




Seithipunal