பிரபல சாக்லெட் ஹீரோவுடன் கைக்கோர்க்கவுள்ள நயன்தாரா.!
Nayanthara Movie With actor madhavan
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்து நயன்தாரா சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வாடகைத்தாய் மூலமாக இவர்கள் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தனர்.
தற்போது அவர் இறைவன், கனெக்ட் உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அட்லீ இயக்குகின்ற ஜாவான் திரைப்படத்தில் ஷாருக்கானக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் நயன்தாரா. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக அறிமுக இயக்குனர் சசிகாந்த் இயக்கம் ஒரு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
பல முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தாலும் கூட மாதவனுடன் அவர் நடிக்கவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
Nayanthara Movie With actor madhavan