மது பிரியர்களின் நரம்பு மண்டலம், லிவர், கிட்னி பாதிப்பு 100% அதிகரிப்பு! அதிரவைக்கும் ஆந்திர ரிப்போர்ட் அலர்ட்!
Liqueur side effort report Andhra
நாடு முழுவதும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில் இது சுகாதார நெருக்கடியாக தற்போது மாறி உள்ளது.
அம்மாநில அரசின் என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட் வெளியிட்ட தரவுகள், மதுவால் உண்டாகும் நோய்கள் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த 2014-19 காலகட்டத்தில் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை 14,026 இருந்த நிலையில், 2019-24-ல் இது 29,369 ஆக உயந்துள்ளது. இது சுமார் 109% அதிகரிப்பு. இதேபோல், இந்த நோய்களுக்கு சிகிச்சை செலவு ரூ.68.98 கோடியில் இருந்து ரூ.141.20 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் மதுபழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு மண்டல பாதிப்புகள் 1,276-ல் இருந்து 12,663 ஆக உயர்ந்துள்ளன. சிறுநீரக பாதிப்புகளும் 49,060-ல் இருந்து 90,385 ஆக அதிகரித்துள்ளன. இதனால் சிகிச்சைக்கு செலவாகும் மொத்த தொகை ரூ.598.77 கோடியிலிருந்து ரூ.941.65 கோடியாகப் அதிகரித்துள்ளதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Liqueur side effort report Andhra