வலியுறுத்தல்! பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை வழங்கியது போல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் வழங்க வேண்டும்!!! - OPS
Urgent same punishment given Pollachi harassment case given Anna University harassment case OPS
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் 'ஓ.பன்னீர்செல்வம்' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது,"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அபராதத்துடன் கூடிய சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும்.
இதேபோன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Urgent same punishment given Pollachi harassment case given Anna University harassment case OPS