என்ன லெஜெண்ட் அண்ணாச்சியின் படத்தில் நயன்தாராவா.?! இயக்குனர்கள் வெளியிட்ட தகவல்.!
Nayanthara Ignores legend Movie directors shared story
தொழிலதிபராக இருந்து சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் சரவணன் அருள். தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து தனி ஹீரோவாக அறிமுகமாகிய திரைப்படம் "தி லெஜண்ட்" என்பதாகும். இத்திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரௌட்டெலா, விவேக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
அப்படத்தையும் பிரம்மாண்டமாக அவரே தயாரித்திருந்தார். இத்திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே பெரும் ட்ரோல்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தது. மேலும், படம் ஓடிடியில் வெளியாகாமால் நீண்ட நாட்கள் இருந்து வந்தது.

இந்த நிலையில் இப்படம் சில நாட்களுக்கு முன் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய நிலையில், அதிகம் பார்க்கப்பட்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இத்தகைய நிலையில் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க இருந்ததாக ஒரு தகவலை அப்படத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி படத்தின் இயக்குனர்களான ஜே டி மற்றும் ஜெர்ரி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகி இல்லாமல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி அணுகினோம். ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்."என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Nayanthara Ignores legend Movie directors shared story