நா முத்துக்குமாரின் மகன் அப்பாவுக்காக எழுதிய கவிதை!  - Seithipunal
Seithipunal


நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது தந்தை பிறந்தநாளுக்கு  ஒரு கவிதை எழுதியுள்ளார்.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில் முக்கிய இடத்தினை பிடித்தவர் நா.முத்துக்குமார். தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்துள்ள முத்துக்குமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயினால் திடீர் மரணம் அடைந்தார். இன்று நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் ஆகும். 

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை

என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Na muthukumar son writes poet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->