இளையராஜா தொடர்ந்து யுவன் வாழ்க்கையும் படமாகிறதா? - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை சினிமா படமாவதை ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான இவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக இருக்கிறது.

இந்த படத்தை இளன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பிரேயர் பிரேமா காதல் தற்போது கவின் நடித்து வெளியாக இருக்கிற ஸ்டார் படத்தை இயக்கி உள்ளார். இளன் கூறும்போது, யுவன் சங்கர் ராஜா படமாக அவரிடம் ஒன் லைன்  கதை சொல்லி இருக்கிறேன். நான் சொன்னது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. யுவன் சங்கர் ராஜா வாழ்க்கை படத்தை நான் தான் இயக்குவேன் என்று பேச்சுவார்த்தை மூலம் ஒப்புதல் போட்டு இருக்கிறேன்.

யுவன் சங்கர் ராஜாவின் ஆரம்ப கால வாழ்க்கை சினிமா துறையில் அவரது வளர்ச்சி போன்ற அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கும் என்றார். இந்த செய்தி யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யுவன் சங்கர் ராஜா 1997 அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முன்னனி இசையமைப்பாளராக உயர்ந்தவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

music director yuvan shankar raja life history movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->