சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்.! சோகத்தில் திரையுலகம்.!
music director dashi died accident in tirupur
சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்.! சோகத்தில் திரையுலகம்.!
பிரபல இசையமைப்பாளர் தஷி என்கிற சிவக்குமார், நாகராஜ், மூவேந்திரன் மற்றும் ஆஸ்திரேலியா வாழ் தமிழரான தமிழ் அடியான் உள்ளிட்ட நான்கு பேரும் காரில் கேரளாவிற்குச் சென்று விட்டு நேற்று மதியம் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இவர்கள் திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால், நிலை தடுமாறிய கார் சாலையோரம் இருந்த பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆஸ்திரேலியா வாழ் தமிழரான தமிழ் அடியான், இசையமைப்பாளர் தஷி என்கிற சிவக்குமார் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரில் பயணம் செய்த மூவேந்திரன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் உயிரிழந்த இசையமைப்பாளர் தஷி, தமிழ் அடியான் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இசையமைப்பாளர் உயிரிழந்தது திரை பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
music director dashi died accident in tirupur