'ஆதிபுருஷ்' படத்தின் போது திடீரென திரையரங்கிற்குள் வந்த குரங்கு.. 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் பாடி ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக விடப்போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். இதில், படக்குழு  ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான திரையரங்கிற்குள் குரங்கு ஒன்று திடீரென உள்ளே நுழைந்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கே 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடலை பாடிய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkey enter Adiprush movie theatre


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->