மின்னல் தீபாவிற்கு, காதலனால் எழுந்த சிக்கல்..! வைரலான போட்டோவால், கணவர் அதிர்ச்சி.!
MINNAL DEEPA PERSONAL PROBLEM BY HER BOYFRIEND
நகைச்சுவை நாயகன் வடிவேலு மற்றும் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்த மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மனதில் இடம் பிடித்தவர் தீபா. இவரின் பெயர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்த காமெடி அனைவரையும் கவர்ந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து தீபா பல படங்களில் நடித்து இருந்தார். தற்போது, ஜீ தமிழில் இருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகின்றார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த தீபாவை ஒருவர் அடித்துவிட்டதாக சில செய்திகள் வைரலானது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தீபா, "இத்தனை ஆண்டுகளாக நான் சினிமா மற்றும் சீரியலில் நடித்து வருகிறேன். எங்கள் குடும்பத்திற்கு நண்பர் என்று ஒருவர் அறிமுகமான பின்னர் தான் எனக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அது விரைவில் தீர்ந்துவிடும்.
இதை அந்த மூன்றாவது நபர் பயன்படுத்திக்கொண்டார். என்னிடம் பேசு என்று நச்சரிக்கிறார். ஒருகட்டத்தில் சூட்டிங் ஸ்பாட்க்கு வந்து என்னுடைய செல்போனை தூக்கி போட்டு உடைத்து என்னை அடித்துவிட்டார்." என்று தீபா தெரிவித்துள்ளார்/
தீபா குறிப்பிட்ட சிட்டிபாபு என்ற அவர், இதுகுறித்து "நானும் தீபாவும் காதலித்தோம். நெருக்கமாக இருந்தோம். என்னுடைய நண்பர்களை பிடிக்காததால் என்னை பற்றி அவர்களிடம் தவறாக தீபா பேசினார்.
எனவே தீபாவை நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஆனால், தீபா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது."என்று கூறி அழுதார் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது தீபாவும், அவரின் காதலரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
MINNAL DEEPA PERSONAL PROBLEM BY HER BOYFRIEND