80-களில் கொடிக்கட்டி பறந்த மோகனா இது.!? சத்தியமா நம்பவே முடியல.!
mic mohan recent picture
1980-களில் கதாநாயகனாக நடித்த மைக் மோகனின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகின்றது.
கோலிவுட் சினிமாவில் 1980-களில் மிக முக்கிய நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்றால் மைக் மோகன் தான். இவர் நெஞ்சத்தை கிள்ளாதே, மெல்ல திறந்தது கதவு, மௌனராகம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றார்.
ரசிகர்களின் மனதில் மைக் மோகன் நீங்கா இடம் பிடித்தவர், சினிமாவிலிருந்து ஒரு கால கட்டத்தில் விலகி இருந்தார். இத்தகைய சூழலில், அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் வெளியாகி இருக்கின்றது.

ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் மைக் மோகன் தாடி , மீசையுடன் இருக்கின்ற அவரது சமீபத்திய தோற்றம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இந்த புகைப்படம் சமூகதளங்களில் படு வைரலாகி வருகின்றது.