ரசிகனின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே, இல்லாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இப்படம் அமோக வெற்றியை, அதாவது லாபத்தைக் கொடுத்துள்ளது. படம் கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு கமலஹாசன் கார் பரிசளித்தார். மேலும் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவர்களை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சை அன்பு பரிசாக நடிகர் கமலஹாசன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம், கைதி படத்தில் கொள்ளப்பட்ட அன்பு கதாபாத்திரம் எப்படி விக்ரம் படத்தில் வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், கைதி படத்தில் நெப்போலியன் தாக்கியதில் அன்புவின் தாடை மட்டுமே உடைந்தது. இதனால்தான் விக்ரம் படத்தில் அவருக்கு தையல் குறியை காட்டப்பட்டது. இது கைதி இரண்டாம் பாகத்தில் மேலும் விளக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lokesh kanagaraj reply to fan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->