தமிழகத்தில் வாக்களிக்காத பிரபலங்களின் பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், திரைப்பட பிரபலங்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.  தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவானது. 

இதனிடையே பொதுமக்கள் பலரும் வாக்களிக்க வரவில்லை. மேலும், திரைப்பட பிரபலங்களும் பலரும் வாக்களிக்கவில்லை. தற்போது வாக்களிக்காத பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இளையராஜா, ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, பாக்கியராஜ், மோகன், கார்த்திக், ஆர் பார்த்திபன், ராஜ்கிரன், அரவிந்த்சாமி, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், விஷால், சுந்தர்சி, சமுத்திரகனி, ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன், கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க வில்லை. 

நடிகர் பார்த்திபன் மட்டும் வாக்களிக்காதற்கு காரணத்தை தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையைக் கருதி வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

list for cinema celebrities did not voting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->