கேசரியா vs லியோவா? நடிகர் விஜய் உடன் நேருக்கு நேர் மோதபோகும் பாலகிருஷ்ணா! - Seithipunal
Seithipunal


லியோ படம் வெளியாகும் அக்.19ஆம் தேதி அன்றே, பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படம் ‘பகவந்த் கேசரி’. இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். 

நடிகை காஜல் அகர்வால், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

தமன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. 

இந்நிலையில், ‘பகவந்த் கேசரி’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் அனில் ரவிபுடி, வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையங்குகளில் படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதே 19 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் வெளியாக உள்ளது. நடிகர் விஜயுடன் நேருக்கு நேர் கோதாவில் இறங்கியுள்ளாரா பாலகிருஷ்ணா என்ற கேள்வியும் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo vs Bhagavant kesari


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->