விஜய் ரசிகர்களே ரெடியா.? லியோ படத்தின் இசை  வெளியீட்டு விழா எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் , தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனையடுத்து 'லியோ' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் அவர் நடித்துள்ள "ஹரோல்ட் தாஸ்" கதாபாத்திரத்தின் க்ளைம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ரிலீஸிக்கான விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லியோ  படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo movie audio launch in Malaysia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->