'தளபதி 68' படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இளம் நடிகை.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 68வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகியான க்ரீத்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krithi Shetty lead role in thalapathy 68 movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->