மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல தென்கொரிய நடிகர்.! - Seithipunal
Seithipunal


'ஹெல்ப்லெஸ்', 'ஆல் அபவுட் மை வைஃப்' மற்றும் பல குறிப்பிடத்தக்க தென் கொரிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் லீ சன் கியூன். ஆப்பிள் டிவி பிளஸ்-ன் முதல் கொரிய தொடரான 'டாக்டர் பிரைன்' தொடரிலும் லீ சன் கியூன் நடித்துள்ளார். 

கடந்த 2021-ல் வெளியான இந்த தொடர் 6 பாகங்களைக் கொண்ட அறிவியல் புனைகதை த்ரில்லராகும். அதுமட்டுமல்லாமல், தென்கொரிய நடிகரான லீ சன் கியூன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படமான 'பாராசைட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் லீ சன் கியூன் சியோலில் இன்று காலை தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது மனைவி யோன்ஹாப், போலீஸாருக்குத் தகவல் அளித்தார். 

அதன் படி போலீசார் விரைந்து வந்து கியூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லீ சன் கியூன் திடீர் மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

koriean actor Lee Sun kyun passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->