கவினின் 'டாடா' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கவின் நடித்துள்ள டாடா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் டாடா. இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும், இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபௌஸி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் டாடா திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavin in dada movie OTT release on March 10 in Amazon prime


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->