பிரபாஸ் ராமரா? கர்ணனா?.. ஆதிபுருஷ் படம் குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக விடப்போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில் "ராமர் மற்றும் லட்சுமணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு. குறிப்பாக தெலுங்கு நடிகர்கள் ஸ்ரீ ராமன் கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasthuri tweet about Adiprush movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->