பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


கவியரசு கண்ணதாசன் :

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா.

காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.

இவர் 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்கள், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றை படைத்துள்ளார். 

ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகளின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kannadasan birthday 2022


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->