எல்லா நம்பிக்கையும் இழந்த நேரத்தில், உயிர் கொடுத்த சன் டிவி.! - செய்திவாசிப்பாளரின் உருக்கமான வாழ்க்கை.!  - Seithipunal
Seithipunal


தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விட சின்னத்திரை கதாநாயகிகளுக்கும் செய்திவாசிப்பாளர்களுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மிகுந்த வைரல் ஆனவர்தான் கண்மணி. 

இவர், தற்போது சில விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டுள்ளார். சிறுவயதிலிருந்தே செய்தியாளராக வேண்டும் என்பது அவரது ஆசை. குடும்பத்தை மீறி சென்னைக்கு வந்துள்ளார். நிறைய சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். அவரது குரல் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

ஏராளமான நெகட்டிவ் கமெண்ட் களுக்கு மத்தியில் செய்யாத தவறுகளுக்கு எல்லாம் வேலையை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிறரது, தவறுக்கு பலிகடா ஆக்கி உள்ளார். வேலை இல்லாமல் ஆறு மாதங்கள் சென்ற நிலையில் வீட்டில் இருப்பவர்கள் நீ வீட்டிற்கு வந்து விடு என்று கூறுவார்கள். 

ஒரு ரூபாய் கூட இல்லாமல் சென்னையில் காலம் தள்ளி இருக்கிறார். வீட்டில் உதவி கேட்கலாம் என்றால் வீட்டிற்கு வரச் சொல்லி கட்டாயப் படுத்துவார்கள். இப்படிப்பட்ட சூழலில், தந்தைக்கு உடல் நிலை மோசமானது. எனவே, மீண்டும் ஊருக்கே சென்ற அவர் இனி அவர்களுக்காக திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 

அப்போதுதான் சன்டிவியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் உயிர் பிழைப்பது போல உணர்ந்துள்ளார் .உடனே, சென்னைக்கு கிளம்பி வந்து விட்டார். தற்போது அவருக்கு பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். ஒரு விஷயம் எளிமையாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாமலேயே இருக்கும்,. இந்த இடத்திற்கு வர நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். எனது வேலையை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanmani shared her Sad Life


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->