கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - படக்குழு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் எndru படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வரும் 20-ம் தேதி சென்னையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanguva movie audio launch date announce


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->