சந்திரமுகி 2 படத்தில் இணைந்த கங்கனா ரணாவத்.! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர் உள்ளிட்டரின் நடிப்பில் வெளியாகிய படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே இது 200 கோடி பட்ஜெட்டில் தயரானது. மேலும், இந்த படம் ரூ. 650 கோடிகள் வரை வசூலித்தது.

2 வருடங்களுக்கு பிறக்ய் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. 

இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் நகைச்சுவை நாயகனாக வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், சந்திரமுகி படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க 27 கோடி ரூபாய் சம்பளத்தை ராகவா லாரன்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana ranaut In chandramuki 2 announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->