காஞ்சனா-3 பட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!!
kanchana 3 movie actress alexandra djavi suicide
பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சனா-3 திரை படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய நான்கு நடிகைகள் நடித்து இருந்தனர். இதில், ரஷ்யாவை சேர்ந்த நடிகை அலெக்சாண்டரியா ஜாவி, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அலெக்சாண்டரியா ஜாவி திடீரென கோவாவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் தனது காதலனுடன் தங்கியிருந்த அலெக்சாண்டரியா ஜாவி தங்கியுள்ளார். அப்போது தனது காலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த அலெக்சாண்டரியா ஜாவி தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கோவா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
kanchana 3 movie actress alexandra djavi suicide