சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்டரை வெளியிடும் கமல்! - Seithipunal
Seithipunal


ஜி.என். அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிறது. 

என். ஆனந்த் இயக்கத்தில் பிரியாலயா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ் காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது. 

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10:30 மணி அளவில் நடிகர் கமலஹாசன் வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal releases santhanam new film title


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->