கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் நடிகை நயன்தாரா.? எந்த படத்தில் தெரியுமா.?
Kamal in 234 movie pair with nayanthara
தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் வரும் 2024 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அதற்கு நயன்தாரா ஓகே கூறியுள்ளாதால் கமலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Kamal in 234 movie pair with nayanthara