ஓடிடியில் வெளியாகும் கல்கி திரைப்படம் - எப்போது தெரியுமா?
kalki movie ott release update
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆனது.

இதற்கிடையே, கல்கி திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கல்கி படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கல்கி 2898 ஏடி படம் அடுத்த மாதம் சுதந்திர தினத்தன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
kalki movie ott release update