வெளியானது கடைசி உலகப்போரின் ட்ரெய்லர்.!
kadaisi ulakapor movie trailar release
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிடி சார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவெற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஹிப் ஹாப் ஆதியே தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு அவரே இசையும் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ மற்றும் படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின.
வரும் 20ம் தேதி வெளியாக இருக்கும், இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 'கடைசி உலகப் போர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
kadaisi ulakapor movie trailar release