''இந்தியன் 2'' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. 

இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. 

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. 

சமீபத்தில் ''இந்தியன் 2'' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதாவது ''இந்தியன் 2'' திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 movie release date


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?




Seithipunal
--> -->