தவேக விஜயே அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன் – நடிகர் பாலா! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தாலும் அரசியலுக்குள் வரமாட்டேன் என சின்னத்துரை நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் பாலா சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளியமக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்யுடன் இணைந்து மாற்றம் என்ற அமைப்பு மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை திறந்துவைத்த சின்னத்துரை பாலா கண்காட்சியை பார்வையிட்டார்.

நடிகர் ராகவா லாரன்சும் நடிகர் பாலா நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா பேசுகையில், தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால் அரசியலில் இறங்கமாட்டேன்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அழைத்தாலும் அரசியலில் இறங்கமாட்டேன். தற்போது கூடுதலாக உழைத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிறருக்கு உதவி செய்து வருவதாக கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will not join politics even if tvk Vijay calls me actor Bala


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->