ஜி.வி.பிரகாஷின் ஸ்னீக் பீக் வெளியீடு.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானது. 

இதையடுத்து, இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் செல்ஃபி. இத்திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வி கிரியேசன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இதனிடையே செல்ஃபி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இன்று இந்த திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV prakashkumar selfie sneekpeak viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->