கவுதமியால் கமலுக்கு ஏற்பட்ட சிக்கல் விவகாரம்.! முடிவிற்கு வந்த பஞ்சாயத்து.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, குறிப்பாக அண்மையில் வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தபட்ட இல்லம் என்று அரசு சார்பில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தனிமைப்படுத்தபட்ட இல்லம் என்று நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர்கள், சிறிது நேரத்தில் நோட்டீஸை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர், சமீபத்தில் நடிகை கெளதமி வெளிநாடு சென்று வந்ததாகவும் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை அடிப்படையாக கொண்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கெளதமி அந்த முகவரியில் தற்போது வசிக்கவில்லை என்பதால் நோட்டீஸ் அகற்றப்பட்டதாகவும், அந்த இடத்தில் கமல்ஹாசனின் கட்சி அலுவலகம் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை  அக்கரையில் அமைந்துள்ள நடிகை கெளதமியின் வீட்டிற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டின் முன்புறம் தனிமைப்படுத்தபட்ட இல்லம் என்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இதன் மூலம் நடிகை கௌதமி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gowthami in isolation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->