நடிகை த்ரிஷா குறித்தான அவதூறுக்கு FEFSI அமைப்பு கண்டனம்.!!. - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "இன்றைய சமூக வலைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு ஏ.வி ராஜு என்பவர் திரைத்துறை குறித்து சில தரமாற்ற அவதூறுகளை கூறியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017 இல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தனமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் உங்கள் அரசியல் பிரச்சினையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கீழ்த்தனமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்துகிறீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இத்தகைய அநாகரிகமான, கீர்த்தனமான செயலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவர்களில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த பாரத தேசத்தில் பெண்கள் மீதும், அவர்களின் பெண்மை மீதும் நடத்தப்படுகின்ற இந்த மாதிரியான அவதூறு தாக்குதல்களை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு பணிவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்" என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சமையல் என பொதுச்செயலாளர் சாமிநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FEFSI condemned alleged on actress Trisha


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->