சுஷாந்த்தை தொடர்ந்து, அடுத்த பிரபலம் தற்கொலை.! அதிர்ச்சியில் திரையுலகினர்.!  - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் விஷயம் கொரோனா வைரஸ் பரவல் தான். இந்த வைரஸ் தாக்குதலால் பல மக்களும் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்து வருகின்றனர். இந்த நாளில் சினிமா பிரபலங்களின் இழப்புகள் பெரும் சோகத்தை அவர்களுக்கு அளித்து வருகின்றது. 

பல முன்னணி நடிகர்களான இர்பான் கான் மற்றும் சுஷாந்த் உள்ளிட்ட நடிகர்களின் மறைவிலிருந்து மக்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிரியா ஜூனிஜா தன்னுடைய வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் வசித்து வருகின்ற தொகுப்பாளினி பிரியா சமீபத்தில் ஒரு பாடகரை பேட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியில் பிரபல பாடகராக இருந்த கைலாஷ்ஷை  பேட்டி எடுத்த பின்னர் தான் இறப்பதற்கு முயற்சி செய்துள்ளார். 

இவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக பிரியா இந்த முடிவை எடுக்கலாம் என்று விசாரணையில் கூறப்படுகிறது. எதற்காக இப்படி ஒரு செயலை அவர் செய்தார் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். ஆனால், இவரது இறப்பிற்கு காரணம் என்ன என்பது கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous vj suicide in her home 


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal