விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிரபல இந்தி நடிகை!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவியுடன் 'தாம் தூம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். 

சில வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 

இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கங்கனா சர்ச்சையான கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். 

டெல்லி, ராம் லீலா மைதானத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார். 

இந்த நிகழ்ச்சியில் 50 வருடத்திற்கு பிறகு கலந்து கொண்ட ஒரே பெண்மணி இவர்தான். இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் என்ற திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''தேஜஸ் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து 3 திரைப்படங்களில் நடிக்க உள்ளேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு பிறகு தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நடிக்க உள்ளேன்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous Hindi actress acting with Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->