மோசமான கேள்வி! ட்ரெய்லரை பார்த்துவிட்டு படத்தை எடை போடக்கூடாது - காட்டமாக தெரிவித்த நடிகை தமன்னா ! - Seithipunal
Seithipunal


ட்ரெய்லரை பார்த்துவிட்டு படத்தை எடை போடக்கூடாது என நடிகை தமன்னா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் அபிரகாம், தமன்னா வேத என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் மும்பையில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரில் சண்டை காட்சிகள் அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதனை அடுத்து ஜான் எப்போதும் ஒரே மாதிரியான ஆக்சன் படங்களில் நடிக்கிறீர்களே வேறு மாதிரியான படங்களில் நடிக்கலாமே என்று செய்தியாளர் ஒருவர் நடிகர் ஜான் அபிரகாமிடம் கேள்வி எழுப்பினார்கள்.

இதனால் கடுப்பான நடிகர் ஜான் இது மோசமான கேள்வி. படத்தை பார்த்து விட்டு பேசுங்கள். இந்த படம் வித்தியாசமான கதை தான் என்று காட்டமாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய நடிகை தமன்னா, ஒரு படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அந்த படத்தை எடை போடக்கூடாது. எந்த முடிவுக்கு வரவும் கூடாது. வேதா படத்தில் ஆக்க்ஷனுக்கு மிஞ்சிய விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். ஜான் அபிரகாம்  சிறந்த ஆக்சன் ஹீரோ.

வேதா ஆக்சனை பின்னணியாக கொண்டு வித்தியாசமான கதை அம்சத்தில் இருக்கும். இந்த படத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன் ஆக்ஷன் படங்களுக்கு இந்த படம் புதிய அர்த்தத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not judge the film after watching the trailer actress Tamanna


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->