'தன் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய நபர் சஞ்சு சாம்சன்'; இயக்குநர் விக்னேஷ் சிவன்..! - Seithipunal
Seithipunal


பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் 'LIK'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏப்ரல் 10-ஆம் தேதியான நாளை வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டுக்கு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். அதன்படி, இண்டர்வியூ ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சஞ்சு சாம்சனை தன்னுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய நபர் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது ''சஞ்சு சாம்சன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விளையாட்டே கதி என இருக்கிறார். முடிவில் அவருக்கான ஒரு மேட்ச் கிடைக்குது, அதில் வந்து அடிக்கிறார் அவருக்கான அனைத்துமாக மாறுகிறது. அதுபோல எல்லாருக்குமே ஒரு நாள் வாழ்க்கையில் வரும். அந்த நாளை நோக்கி காத்திருப்பது மட்டும் தான் நம்முடைய வேலை. அதுக்காக நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவர் அதற்கு தயாராக இருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும். அவருக்கு போட்டிக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதே அவருக்கு தெரியாதாம், ஆனாலும் அவர் தொடர்ந்து வலைப்பயிற்சி செய்துகொண்டே இருப்பாராம். என்ன மாதிரியான நம்பிக்கை பாருங்க அவருக்கு, வாய்ப்பு வருமா என்ற சமயத்தில் கிளவுஸை தூக்கி இஷான் கிஷன் கிட்ட கொடுக்கிறாங்க. அவருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும், அதுபோன்ற ஒரு நிலையிலிருந்து அவர் கம்பேக் கொடுக்கிறார். அப்போது வந்து அவர் அடிக்கும்போது எனக்கு புத்துணர்ச்சியாக இருந்தது.

அவரிடம் நான் ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்தபோதே பேசுவேன், மெசேஜ் செய்வேன். அவருடைய வெற்றியும், உலகக்கோப்பை பயணமும் எனக்கு என் வாழ்க்கையில் நம்பிக்கை கொடுத்தது. சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வாங்கும்போது நமக்கும் இப்படி ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை கிடைக்குது. உனக்கான நேரம் வரும் வா எழுந்து ஓடு என்ற உணர்வு தோன்றியது என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Vignesh Shivan states that Sanju Samson is the key person who instilled hope in his life


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->