தளபதி 68 - ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தளபதி 68 - ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு - வைரலாகும் புகைப்படம்.!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இந்தத் திரைப்படத்தில், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத் தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் தொடக்க கட்டத்தில் உள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் "தளபதி 68" குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், இரண்டு புகைப்படங்களை பகிர்ந்ததுடன், "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vengat prabu share thalapathy 68 movie update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->