கேஜிஎஃப் நடிகருடன் இணையும் பிரபல தமிழ் இயக்குனர்.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். இவருடைய நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்தது. இதனையடுத்து யஷ்ஷின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பி எஸ் மித்ரன் நடிகர் யஷ்ஷை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குனர் மித்ரன் யஷ்ஷை சந்தித்து கதை சொல்லியதாகவும் அந்த கதை நடிகர் யஷ்ஷூக்கும் பிடித்து விட்டதால் அவர் ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director PS Mithran direct to kgf actor Yash


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->