திரையுலகில் சோகம்… 'பசி' திரைப்படத்தின் இயக்குநர் துரை காலமானார்! - Seithipunal
Seithipunal


'பசி' திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துவிட்டார். தமிழ் திரை உலகின் மூத்த கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், கலை மாமணி துரை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இயக்குனர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு 1979 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் தமிழக அரசின் விருதுகளும் கிடைத்தது. 

துரை இயக்கிய அவளும் பெண் தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது மறைவிற்கு தமிழ் திரை உலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director Durai passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->