அஜ்மல் நடித்த 'வியூகம்' திரைப்படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அஜ்மல் நடித்துள்ள திரைப்படம் 'வியூகம்'. இந்த திரைப்படம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கையை மயமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் இருவரையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மேலும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் 'வியூகம்' திரைப்படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்து, இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். 

இந்நிலையில் சந்திரபாபு சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், 'வியூகம்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஜனவரி 11ஆம் தேதி வரை 'வியூகம்' திரைப்படத்தை திரையிடக்கூடாது என உத்தரவிட்டனர். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court banned Ajmal movie


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->