பிரபல பாடகி உஷா உதுப் கணவர் மறைவு! சோகத்தில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் 'பாப் குயில்' என்றழைக்கப்படும் பின்னணி பாடகி உஷா உதுப் கணவர் ஜானி (வயது 78) நேற்று திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.

மேற்குவங்கம்: கொல்கத்தா பாலிகஞ்ச் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் உஷா உதுப் - ஜானி சாக்கோ தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.  

இந்த நிலையில், நேற்று வீட்டில் தன் கணவர் ஜானியுடன் உணவருந்தி கொண்டிருந்தார். பின்னர் உஷா உதுப் சிறு பனி காரணமாக வெளியே செல்ல, அந்நேரத்தில் கணவர் ஜானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஜானி ஜாக்கோவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஜானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜானியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. திரையுலகை சேர்ந்த பலரும் இந்த இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளனர்.


பின்னணி பாடகி உஷா உதுப் :

1969- ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர  உஷா உதுப். சரளமாக தமிழ் பேசும் உஷா உதுப் தமிழகத்தில் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளின் திரைப்படங்களிலும் பாடி புகழ் பெற்ற உஷா  உதுப்புக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema News  Playback Singer Usha Udup Husband Death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->