சினிமாவிலும் சனாதனமா? கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!
cinema in Sanatana producer opposition
கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவாகும் படம் 'எனக்கு எங்டே கிடையாது'. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய விக்ரம் ரமேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த படத்திற்கு தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலாச்சரண் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை ஆக்சன் ரியாக்ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.
சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது தயாரிப்பாளர் கார்த்திக் தெரிவித்திருப்பதாவது, 'வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தில் பயிற்சி எடுத்தேன்.

7 வருட தவமாக இந்த படத்தை தயாரித்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் படத்தை தொடங்க முயற்சிக்கும் போது ஏதாவது தடங்கள் ஏற்பட்டு தள்ளிப்போனது.
ஆனால் 'எனக்கு என்டே கிடையாது' என்ற படத்தின் டைட்டிலை எனக்குள் சொல்லி நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன். 3 பேருக்கு இடையே ஏற்படும் போராட்டம் ஒன்று இருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம்.
அவர் அதை ஒரு பிரம்மாதமான சண்டைக் காட்சியாகவே மாற்றி அமைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது, 3 கோடி, 4 கோடி வைத்து சிறிய படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வரவேண்டாம் என தெரிவித்திருந்தார். இதுவும் ஒரு விதமான சனாதனம் தான். இதனைச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை' என்றார்.
English Summary
cinema in Sanatana producer opposition